ஞாயிற்றுக்கிழமை, மே 20, 2012
   
Text Size
Get a free account @newpottuvil.info
வழு
  • DB function failed with error number 1062
    Duplicate entry '1337517322' for key 'time' SQL=INSERT INTO jos_vvcounter_logs (time, visits, guests, members, bots) VALUES ( 1337517322, 6, 4, 0, 2 )

கடந்த 24 மணித்தியாலத்தில் பொத்துவிலில் கூடிய மழை வீழ்ச்சி

Rainஇன்று காலை 8 மணியுடன் முடிவுற்ற 24 மணித்தியாலத்தில் பொத்துவிலில் கூடிய மழை வீழ்ச்சி.

இன்று காலை 8 மணியுடன் முடிவுற்ற 24 மணித்தியாலத்தில் பொத்துவிலில் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக பொத்துவில் வானிலை அவதான நிலைய அதிகாரியான எம்.ஐ.ஏ. நயீம் தெரிவித்தார்.

இதன்படி பொத்துவிலில் 168.7 மி.மீ. மழை வீழ்ச்சியும், அக்கரைப்பற்றில் 85 மி.மீ. மழை வீழ்ச்சியும், மட்டக்களப்பில் 90 மி.மீ. மழை வீழ்ச்சியும் பதிவாகியதாக தெரிவித்த அவர், இன்று மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்யக்கூடிய காலநிலையே காணப்படுவதாகவும், இடையிடையே இடி, மின்னல் தாக்கங்களும், காற்றின் வேகம் சற்று அதிகரித்துக் காணப்படும் எனவும் தெரிவித்தார்.

 

அடுத்த தேர்தலை முன்வைத்து சேவை செய்யவில்லை - அமைச்சர் உதுமாலெப்பை

 


(அமைச்சின் ஊடகப் பிரிவு)
பொத்துவில் பிரதேச நீர்ப்ப்பாசன பிரச்சினைகளுக்கு தீர்வினை எட்டும் முகமாக நீப்பாசன உயர் அதிகாரிகளுடன் பொத்துவிலுக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் உதுமாலெப்பை மேற்கண்டவாறு கூறினார்.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் பொத்துவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வைபவத்தில் அமைச்சர் மேலும் கூறுகையில், நான் ஒருபோதும் அடுத்த தேர்தலில் நீங்கள் எனக்கு வாக்குப்போட வேண்டும் என்ற எண்ணக் கருவோடு சேவையாற்ற வரவில்லை. மாறாக இறைவனின் நாட்டத்தால் தேசிய காங்கிரஸின் தலைமையினால் வழங்கப்பட்ட அமானிதமே கிழக்கு மாகாண அமைச்சு பதவியாகும்.

அந்த அமானிதத்தை கொண்டு எனது இறைவனுக்கு பயந்து இன, மத பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் சேவையாற்றி வருகின்றேன். அடுத்த தேர்தலில் வெற்றி பெறலாம் அல்லது தோல்வியுறலாம் அதுவல்ல விடயம் கொடுக்கப்பட்ட பொறுப்பை சரிவர செய்தாயா என இறைவன் கேட்பான் அதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். வீதி போட்டேன், வாய்க்கால் தோண்டினேன் எனக்கு வாக்கு போடுங்கள் என்று ஒரு போதும் வரமாட்டேன். அதிகாரங்கள் கையில் இருக்கும்போது மக்களின் தேவைகளை நிறைவேற்ற என்னால் முடியுமான முயற்சிகளை செய்த வண்ணமே உள்ளேன்.
   

35 மில்லியன் நிதியில் பொத்துவில் செம்மணிக்குளம் அபிவிருத்தி

 

(நிஸார் ஜமால்தீன்)
பொத்துவில் செம்மணிக்குளத்தினை 35 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனர்நிர்மாணம் செய்வது தொடர்பாக கிழக்கு மாகாண பதில் முதலமைச்சரும் வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் நீர்ப்பாசன திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

இக்குளம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இக்குளத்தினை விரைவாக புனர்நிர்மாணம் செய்வதன் மூலம் சுமார் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாயக் காணிகள் நன்மை அடைய முடியும் என பதில் அமைச்சருடன் கலந்துரையாடிய விவசாய மக்கள் தெரிவித்தனர். இந்நிகழ்வில் பேராசியர் எஸ்.எஸ்.திலகசிறி, நீர்ப்பாசன பொறியியலாளர்களான எச்.ஆர்.மதுரங்க, சுஜீதரன், பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் யு.எல்.ஏ.நசார், அமைச்சர் அதாஉல்லாவின் இணைப்புச்செயலாளர் ஏ.பதுர்கான் உட்பட உயர் அதிகாரிகளும் விவசாய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.


 

 

   

இன்று சந்திரகிரகணம்; இலங்கையில் முழுமையாக காண வாய்ப்பு

இவ்வாண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் இன்று மாலை 6.16 முதல் இரவு 9.48 மணிவரையான காலப்பகுதியில் நிகழவுள்ளது.

இருப்பினும் இந்த சந்திர கிரகணம் இன்று இரவு 11 மணிக்கே முழுமையாக நிறைவடையும்.

இன்றைய  சந்திர கிரகணத்தை இலங்கையில் முழுமையாக காணக்கூடியதாக இருக்கும் என ஆதர் சி.கிளார்க் மத்திய நிலையம் குறிப்பிட்டது.

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி குறுக்கிடுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகின்றது. இதன்போது சூரியனின் நிழல் பூமியை ஊடறுத்து சந்திரனில் படியும் போது சந்திரனின் நிறத்தில் மாற்றம் ஏற்படும் என வானியல் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. 

இதன்படி பூமியின் நிழல் சந்திரனை முழுமையாக மறைத்து 51 நிமிடங்கள் நீடிக்கவுள்ளது. இவ்வாறு இலங்கை நேரப்படி இன்று இரவு 7.36 மணி முதல் 8.27 மணிவரை முழு சந்திர கிரகணம் தென்படவுள்ளது. மொத்தமாக இந்த சந்திர கிரகணம் 3 மணி 52 நிமிடம் 17 வினாடிகள் நீடிக்கவுள்ளதாக ஆத்தர் சி. கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்தது. 

இன்று நிகழவுள்ளது இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரணமாகும். இதற்கு முன்னர் கடந்த ஜூன் 10ஆம் திகதி சந்திரகிரகணம் ஏற்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஒரு சந்திர கிரகணம் இரண்டு ஆண்டுகள் கழித்தே நிகழவுள்ளது.

இதன்படி எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதியிலேயே மீண்டுமொரு சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. எனினும் அந்த சந்திரகிரகணத்தை இலங்கையில் முழுமையாக காண முடியாது என வானியல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் இன்றைய தினத்தை தவிர்த்து இலங்கை மீண்டும் முழுமையான சந்திரகிரகணத்தை காண்பதற்கு 6 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அதாவது வரும் 2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 21ஆம் திகதி நிகழவுள்ள சந்திர கிரகணத்தையே இலங்கையால் முழுமையாகக் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

   

பொத்துவில் பிரதேச நன்னீர் மீனவருக்கு வலைகள் அன்பளிப்பு

பொத்துவில் தினகரன் விசேட நிருபர்

பொத்துவில் பிரதேச நன்னீர் மீனவர்களுக்கு மீன்பிடிக்கும் வீச்சு வலை நன்கொடை வழங்கும் வைபவம் பொத்துவில் நூலக கேட்போர் கூடத்தில் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.ஏ. வாசித் தலைமையில் நடைபெற்றது. கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம். அப்துல் மஜீட்டின் 2011 நிதி ஒதுக்கீட்டில் ரூபா 250000 பெறுமதியான தரம் மிக்க வீச்சு வலைகள் எழுபது மீனவர்களுக்கு வழங்கப்பட்டது.

   

கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது

தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடைபெறும் ‘வியர்வையின் ஓவியம்’ உழைக்கும் மக்கள் கலைவிழாவில் இவ்வருடத்தின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை  கவிஞர் பொத்துவில் அஸ்மின் பெற்றுக்கொண்டார்.

இவ்விழா, கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் அண்மையில்  நடைபெற்றது.

இயக்குனர் கேசவராஜ் இயக்கும் ‘பனைமரக்காடு’ திரைப்படத்தின் மூலம் திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமாகியுள்ள இவர்,  ஏற்கெனவே ஜனாதிபதி விருது-(2001)இஅகஸ்தியர் விருது(2011) சிறந்த பாடலாசிரியருக்கான விருது (2010) உட்பட 10க்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

தனது எனும் ‘ரத்தம் இல்லாத யுத்தம்’ கவிதை நூல் மிக விரைவில் வெளியிடவுள்ளதாகவும் இவர் கூறுகிறார்.

 

   

MARRIED COUPLE DROWNS IN POTTUVIL

Married couple drowns in Pottuvil

A married couple drowned in Paanama area in Pottuvil September 9 morning while fishing in the Panagala lagoon, Police Spokesman SP Prishantha Jayakoddy stated.

The bodies of the two victims have been found and are awaiting the post mortem examinations.

 

   

பக்கம் 1 - மொத்தம் 23 இல்

விளம்பரம்

GCE A/L EXAMINATION 2011
Enter your Index Number

இங்குள்ள விளம்பரங்களை கிளிக் செய்து உதவி செய்யுங்கள்

POTTUVIL.INFO






Land For Sale

 

தேடல்

 

எமது செய்திகளை இமெயில் வழியே பெற்றுக் கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்
Enter your email address:

Delivered by FeedBurner

 

 

 

 

கருத்துக்கணிப்பு

இத்தளம்பற்றி உங்கள் அபிப்பிராயம்

இங்கெல்லாம் இருந்து வாராங்க...

free counters

 

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday444
mod_vvisit_counterYesterday792
mod_vvisit_counterThis week444
mod_vvisit_counterLast week4641
mod_vvisit_counterThis month11388
mod_vvisit_counterLast month7651
mod_vvisit_counterAll days213323

We have: 5 guests, 2 bots online
Your IP: 38.107.179.237
 , 
Today: மே 20, 2012

எம்முடன் இணைப்பில் தற்சமயம்

எங்களிடம் 7 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

Facebook Fans

Joomla Templates and Joomla Extensions by ZooTemplate.Com
காப்புரிமை © 2012 NEWPOTTUVIL.INFO. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.